Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

2013-ல் ரிலாக்ஸ் விருது பெரும் அதிஷ்டசாலிகள்

2013-ல் ரிலாக்ஸ் விருது பெரும் அரசியல் அதிஷ்டசாலிகள் யார் என்று வாங்க பார்க்கலாம்.

சிறந்த டாக்டர் சொல் கேட்பவர் விருது - பண்ருட்டி ராமச்சந்திரன்

டாக்டர் தனது உடல் நலத்தைக் கவனிக்கச் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக அரசியலை விட்டே விலகி ஓய்வெடுக்கச் சென்ற பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இந்த ஆண்டுக்கான ‘சிறந்த டாக்டர் சொல் கேட்பவர்’ விருது. இந்த விருதுடன் சிறப்புப் பரிசாக ஒரு ஈசி சேரும் வழங்கப்படுகிறது.

சிறந்த தேர்தல் விடாகண்டர் விருது - விஜயகாந்த்

தமிழர்கள் வட இந்தியாவுக்கு படை எடுத்துச் சென்றதைப் பற்றியெல்லாம் புத்தகங்களில்தான் படித்திருப்போம். ஆனால் ஏற்காட்டில் இடைத்தேர்தல் நடக்கும்போது அதைக்கூட புறக்கணித்துவிட்டு டெல்லி தேர்தலில் போட்டியிட்ட கேப்டனுக்கு சிறந்த தேர்தல் போட்டியாளர் விருது. இந்த விருதுடன் சிறப்பு பரிசாக ‘30 நாட்களில் இந்தி படிப்பது எப்படி?’ என்ற புத்தகமும் வழங்கப்படுகிறது.

சிறந்த ரத்ததானம் செய்தவர் விருது - ராகுல் காந்தி

மத்தியப் பிரதேச மாவட்டத்தில் ஒரே இரவில் 25 ஆயிரம் கொசுக்கள் தன்னைக் கடிக்க அனுமதித்த ராகுல் காந்திக்கு இந்த ஆண்டின் சிறந்த ரத்ததானம் செய்தவர் விருது. இந்த விருதுடன் சிறப்பு பரிசாக அவருக்கு ஒரு பிளேட் ஏழை வீட்டு பழைய சாதம்.


சிறந்த கடித எழுத்தாளர் விருது - ஜெயலலிதா

மின்சாரம் குறைந்தால் ஒரு கடிதம், மீனவர்கள் தாக்கப்பட்டால் ஒரு கடிதம், காமன்வெல்த் மாநாடு நடந்தால் ஒரு கடிதம் என்று எடுத்ததற்கெல்லாம் மன்மோகன் சிங்குக்கு கடிதங்களாக எழுதித் தள்ளிய ஜெயலலிதாவுக்கு இந்த ஆண்டின் சிறந்த கடித எழுத்தாளர் விருது. சிறப்பு பரிசாக கொடநாட்டுக்கு ஒரு இலவச சீசன் டிக்கெட்.


சிறந்த தூண்டில் மனிதர் விருது - கருணாநிதி

‘விஜயகாந்த் கூட்டணியில் சேர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்’ என்று ஒரு பக்கமும், ‘மோடி ரொம்ப நல்லவர்’ என்று மற்றொரு பக்கமும், மாறி மாறி தேர்தல் கூட்டணிக்காக தூண்டில் போட்டுவரும் கருணாநிதிக்கு சிறந்த தூண்டில் மனிதர் விருது. விருதுடன் சிறப்பு பரிசாக அவருக்கு ரொம்பப் பிடித்த பாராட்டு விழா.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : The Hindu



சுடச்சுட நான்கு தகவல்கள்

சுட சுட இன்றைய செய்திகள் நான்கு.

1. இந்திய நாணயம் இப்போது புதிய வடிவில் வெளிவர இருக்கிறது. அதன் மாதிரி வடிவம் இதோ.


2. மனோதத்துவ புத்தம் ஒன்றில் "மனதை தொட்ட ஆறு மூக்கியமான பாயிண்ட்" இதோ.
  1. தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கிலோமீட்டர் ஓடுங்கள்.

  2. பதினைந்து நிமிடம் சிரசாசனம் செய்யுங்கள்.

  3. பகலில் இரண்டுமணி நேரம் தூங்குங்கள்

  4. தினசரி பேபரை ஒரு வரி விடாமல் படியுங்கள்.

  5. தினமும் நண்பர்களுடன், காலையில் மூன்று மணி நேரமும் , மாலையும் மூன்று மணி நிறமும் மனம் விட்டு பேசுங்கள்

  6. ஒரு நாள் விட்டு ஒரு நாள், சினிமாவுக்கு போங்கள்.

இந்தனையும் செய்ய உங்களுக்கு நேரமிருந்தால், நீங்கள் வேலை வேட்டியில்லாதவர், உபயோகமான வேலை ஒன்றை தேடிக் கொள்ளுங்கள்.

3. இன்றைய தத்துவம் - வில்லியம் மார்டின்
மனோவலிமை இல்லாதவர்கள் சந்தர்ப்பங்களுக்காக கார்திருக்கின்றனர்.

4. ஒரு நகைச்சுவை - இன்றைய அரசியல்வாதிகளுக்கு இது பொருந்துமோ ....?!
எதிர்க்கட்சிக்காரங்க சொல்றதைவிட ரெண்டு மடங்கா சொல்லன்னும்கிரத்துக்காக தலைவர் இப்படியா உளர்றது ?

அப்படி என்ன சொன்னாரு ?

எதிர்க்கட்சிக்காரங்க 2011-ல் ஆட்சியைப் பிடிப்போம்னு சொன்னதுக்கு, நாங்க ஆட்சியைப் 4022-ல் பிடிப்போம்னு தலைவர் பதிலடி கொடுத்திருக்காரே!?
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top