ஆயிரம் விளக்கு - விமர்சனம்

மதுரையை பின்னணியாக கொண்டு சத்யராஜ், சாந்தனு, சனா கான், சுமன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்து இயக்குனர் ஹோசிமின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் 'ஆயிரம் விளக்கு'.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இனி...

தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக Download


1. கே.பீ.சுந்தராம்பாள் பாடிய ஒரு பக்தி பாடலின் வழிகளில் தொடங்கி பிறகு ஒரு குத்து பாடலா மாணிக் விநாயகம் குரலில் இந்த பாடல் மலர்கிறது.
நான் மதுர மதுர
நீ மதுர மதுர
நான் நீ மதுரையில கண்ணுமுழிட்சோம்
மதுரையின் சிறப்புகளை அங்கங்கே தூவிவிட்டு பாடலுக்கு மெருகேற்றி மதுரையை சிறப்பித்திருக்கிறார் கவினர்.

மதுர மதுர என்று என்தனை மதுர இந்த பாடலில் வருகிறது என்று ஒரு போட்டி வைத்து பரிசளிக்கலாம்.

2. மதுரை மண்ணின் மனம் வீசும் வரிகளுடன் கிராமத்தின் சிறப்பை பற்றியும் பறைசாற்றும் வரிகளுடன் ஒரு பாடல். கேட்டவுடனே எனக்கு பிடித்துப்போன பாடல்.
பாப்பாவுக்கு ஒரு ஜிஹார்தண்டா கொடுப்பா
பாப்பாவுக்கு அதை எச்சம் வச்சு கொடுப்பா
இவள் தளுக்கு கொஞ்சம் மினுக்கு
என்று தொடங்கும் ஒரு கேலியும் கிண்டலும் நிறைந்த பாடல். கார்த்திக்கும் ரீட்டாவும் இணைந்து பாடியிருக்கும் பாடல்.


3.யேசுதாஸ் குரலில் ஒரு பாடல்.
உத்தம புத்திரனே
உயிர் தந்த சித்திரனே
தேன்மதுர பாடியனே
எனத்தொடங்கும் ஒரு சிறு சோகப்பாடல். தந்தையும் தனயனும் பிரிந்து சென்ற நேரத்தில் பாடும் பாடல் போல இருக்கு.

4. அடுத்து ஒரு காதல் மெலடி பாடல். ஹரிஷ் ராகவேந்திரா + சின்மயி குரல்களில் இதமாக ஒளிகிறது.
ரதியே என் ரதியே என் அகிலம் நீயடி
சகியே என் சகியே உன் சகலம் நானடி
வரிகளை சிதைக்காத இசை கோர்வை. கேட்ட கேட்ட சுகமா இருக்கு. ஒரு வித புது குரலில் சின்மயி பாடியிருப்பது அழகு.

5. கார்த்திக் குரலில் தன்னம்பிக்கை + சுய முயற்சி பற்றி சொல்லும் ஒரு அதிரடி பாடல்.
ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா
அசந்துபுட்ட கொட்டப்போற தேளுடா
என்று அதிரடியாய் தொடங்கும் ஒரு பாடல்.

சண்டைக்கு துணிந்துவிட்டால் - எனக்கு
சாப்பாடே அடிதடிதான்

என்று கவினர் தன் வீரத்தையும் மண்ணின் வாசத்தையும் கலந்து கொடுத்துள்ளார்.



6. மீண்டும் ஒரு யேசுதாஸ் பாடிய மெலடி பாடல்.
என்ன தவம் செய்தேன் என்னைபெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம் காண செய்த மகனே
சந்தோஷ நிமிடங்களில் ஒரு தந்தை தன் மகனின் பெருமை பற்றி குடும்பத்தில் ஆடி பாடி பாடும் ஒரு பாடல்.

என்விரல் நடுவே இடைவெளி எதற்கு
உன்விரல் கோர்த்து உறவாடத்தான்
வலிகளெல்லாம் மறந்து விளையாடதான்

சத்தியராஜ் பாடும் பாடல் போல இருக்கு. சற்றேண்டு கேட்டல் இது எஸ்.எ.ராஜ்குமார் பாடல் போல தோண்டும்.

7. காதல் ஏக்கப் பாடல்
போறாளே நெஞ்ச கிள்ளிக்கிட்டு கிள்ளிக்கிட்டு போறாளே
வாராளே நெஞ்ச அள்ளிக்கிட்டு அள்ளிக்கிட்டு வாராளே
எனத்தொடங்கும் ஒரு காதல் பாடல். கார்த்திக் குரலில் அழகால் ஒலிகிறது.

உன்னைப்போல என்னக்கொல்
அரளி விதை தேவையில்லை

என்று கவினர் காதலின் தவிப்பை மிக அழகாக கவி வரைந்திருக்கிறார்.


ஆயிரம் விளக்கு - பிரகாசமாய் ஒலிகிறது! நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!

சக்கரகட்டிக்கு இந்த ஆயிரம் விளக்குல ஒரு விளக்காவது ஒளி ஏத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top