Showing posts with label நயன்தாரா. Show all posts
Showing posts with label நயன்தாரா. Show all posts

நண்பேன்டா (2014)

'இது கதிர்வேலன் காதல்' கூட்டணியான உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா மீண்டும் 'நண்பேன்டா' படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவிருக்கிறது.

வெற்றி கூட்டணி

'ராஜா ராணி' படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் பிரவேசித்துள்ள நயன்தாரா, உதயநிதி ஸ்டாலினுடன் 'இது கதிர்வேலன் காதல்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து பிப்ரவரி-14ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் யூ-டியூப் இணையத்தில் ஹிட்டடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

'இது கதிர்வேலன் காதல்' படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின். இயக்குநர் ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெகதீஷ் இயக்கும் 'நண்பேன்டா' படத்தில் நடித்து, தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். ஹிட் கூட்டணியான உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹாரிஸ் ஜெயராஜ், பாலசுப்ரமணியெம் ஆகியோர் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

நண்பேன்டா

'நண்பேன்டா' படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தார்கள். 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் இயக்குநர் ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஜெகதீஷ். இதனால் அவருக்கு நயன்தாராவுடன் ஏற்கனவே பழக்கம், 'இது கதிர்வேலன் காதல்' படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு நயன்தாராவுடன் ஏற்பட்ட நட்பு இருவரும் மீண்டும் 'நண்பேன்டா' ஆகலாமே என்று நயனிடம் பேசியிருக்கிறார்கள்.

படத்தின் கதையை கேட்ட நயன் உடனே ஒ.கே சொல்லியிருக்கிறார். பிப்ரவரி 17ம் தேதி முதல் திருச்சியில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. திருச்சியை பின்னணியாக கொண்ட கதை என்பதால் முழுப்படத்தையும் அங்கேயே படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

காமெடி கூட்டணி

இப்படத்திலும் உதயநிதி ஸ்டாலினுடன் சந்தானம் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்களின் காமெடி சாயல் இப்படத்தில் இருக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி முந்தைய படங்கள் போல் அல்லாமல் படத் தொடங்கத்தில் இருந்து முடியும் வரை சந்தானம் வருவது போன்று அவரது பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறாராம் ஜெகதீஷ்.

தமிழ் திரையுலகில் தற்போது பாண்டிராஜ் - சிம்பு படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற 'கஹானி' ரீமேக்கான 'அனாமிகா' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா - சந்தானம் - ஹாரிஸ் ஜெயராஜ் என ஒரு மெகா கூட்டணி இணைந்து மீண்டும் காமெடியில் கலக்க இருக்கிறார்கள்.

படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Goolge Images & The Hindu



இது கதிர்வேலன் காதல் (2014) - பாடல் விமர்சனம்

"குருவி","மன்மதன் அம்பு", "ஆதவன்", "7ஆம் அறிவு" ஆகிய படங்களைத் தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். முன்னனி தயாரிப்பளராக இருந்த இவர் 2012ஆம் ஆண்டில் இயக்குநர் "ராஜேஷ்" இயக்கத்தில் வெளியான "ஒரு கல் ஒரு கண்ணாடி" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.


முதல் படத்திலேயே முன்னனி ஹீரோவாக முத்திரைப்பதித்த இவர் தற்போது நயன்தாரா உடன் "இது கதிர்வேலன் காதல்" என்ற படத்தில் நடித்து வருகிறார். முதல் தடவையாக இப்படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் சந்தானம் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை "சுந்தரபாண்டியன்" படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார்.

ஒரு கல் ஒர் கண்ணாடி படத்தின் வெற்றியும், நயன் தாராவின் நம்பர் 1 அந்தஸ்தும் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்க வைத்துள்ளது. மேலும் சுந்தரபாண்டியன் என்ற சக்சஸ் படத்தை கொடுத்த இயக்குனர் பிரபாகரனின் இரண்டாவது படம் என்பதால் எதிர்பார்ப்பு கூடுகிறது.

வழக்கம்போல சந்தானம் காமெடியில் கலக்கியிருக்கிறார் என்றும், நீண்ட இடைவேளைக்கு பின்னர் கிளாமர் இல்லாத சந்திரமுகி படத்தில் வந்ததை போல ஒரு ஹோம்லி லுக் நயன் தாராவை இந்த படத்தில் பார்க்கலாம் என்றும் இயக்குனர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும்... கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

படத்தில் மொத்தம் 5 பாடல்கள்.

1. முதல் பாடல் 'மெள்ள மெள்ள..." என்று தொடங்கும் பாடலை கார்த்தி பாடியுள்ளார். பெப்பி சாங். பாடலுடன் பயணித்து வரும் விசில் அருமை. நம்மவர் படத்தில் வரும் "சொர்க்கம் என்பது நமக்கு " பாடல் கொஞ்சம் + கடல் படத்தில் வரும் "ஏலே கீச்சா " பாடல் கொஞ்சம் கலவை.

2. இரண்டாவது பாடல் டூயட் பாடல். இதை ஹரினி, ஹரீஷ் ராகவேந்திரா ஆகியோர் பாடியுள்ளனர். "அன்பே அன்பே..." என்று தொடங்கும் மெலடி பாடல் இது. தனது ஆஸ்தான பாடகர்கள் பாடிய மெலடி பாடல் இது. கேட்ட உடனே பிடித்துவிடும் பாடல்.

3. மூன்றாவதாக "சர சர சரவெடி..." என்னும் குத்துபாடலை கேகே, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, பாலாஜி ஆகியோர் பாடியுள்ளனர். மெலடி போக் வகையை சார்த்த பாடல் இது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

4. நான்காவது பாடல் "விழியே விழியே..." என்று தொடங்கும் ராஜு பாடிய பாடல். யுகபாரதி எழுதிய மெலடி பாடல். கேட்பதற்கு உன்னிமேனன் பாடியது போல இருக்கு.

5. கடைசியாக "பல்லக்கு தேவதையே..." என்று தொடங்கும் பாடல். இந்த பாடலை ஜெஸ்ஸி, வேல்முருகன், ஜெயமூர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர். மீண்டும் ஒரு குத்து பாடல். நாதஸ்வரம் முழங்க ஒரு கிராமிய காதல் பாடல். வேண்டாம் மச்சான் வேண்டாம் பாடல் போல இந்த பாடல் விரைவில்....



கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் இது கதிர்வேலன் காதல் ரசிக்கும்படி இருக்கு!

படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Goolge Images & TamilTunes



2013–ல் கலக்கிய நடிகைகள்

2013–ல் புதுமுக நடிகைகள் வரத்து அதிகம் இருந்தது. ஆனால் ஒன்றிரண்டு படங்களில் அவர்கள் காணாமல் போயினர். நயன்தாரா, காஜல் அகர்வால், திரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, அமலாபால் போன்றோர் மார்க்கெட்டை நிலையாக தக்க வைத்துக் கொண்டனர்.

நயன்தாரா

நயன்தாரா இந்த வருடமும் தமிழ், தெலுங்கில் நம்பர் ஒன் கதாநாயகியாகவே இருக்கிறார். காதல் சர்ச்சைகளால் ஒரு வருடம் இடைவெளி விட்டு வந்தாலும் ரசிகர்கள் அவரை ஒதுக்கவில்லை.

ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த ‘ராஜா ராணி’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. அஜீத்துடன் நடித்த ‘ஆரம்பம்’ படமும் ஹிட்டானது.

தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘அனாமிகா’ படத்தில் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார். இது இந்தியில் வித்யாபாலன் நடித்து பரபரப்பாக ஓடிய ‘கஹானி’ படத்தின் ‘ரீமேக்’ ஆகும். இதில் நயன்தாராவுக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். உதயநிதி ஜோடியாக ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் நடிக்கிறார். சிம்பு படம் உள்பட மேலும் 3 படங்கள் கைவசம் உள்ளன.


காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலை கடந்த வருடம் ரிலீசான ‘துப்பாக்கி’ படம் முன்னணி நடிகையாக்கியது. ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தில் நடித்தார். தற்போது விஜய்யுடன் மீண்டும் ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார்.


அனுஷ்கா

அனுஷ்கா நடித்து இந்த வருடம் ‘அலெக்ஸ் பாண்டியன்‘, ‘சிங்கம் 2’, ‘இரண்டாம் உலகம்’ படங்கள் வந்தன. இதில் ‘சிங்கம் 2’ அதிக வசூல் குவித்தது.

தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘ருத்ரமாதேவி’, பாஹுபலி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்டவை.

ஹன்சிகா

ஹன்சிகாவுக்கு இந்த வருடம் ‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘சிங்கம் 2’ படங்கள் கைகொடுத்தன.
கார்த்தி நடிக்கும் 'பிரியாணி' படமும் இந்த மாதத்திலேயே ரிலீசாக உள்ளது. வாலு, அரண்மனை, வேட்டை மன்னன், மான் கராத்தே, உயிரே உயிரே என நிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

அமலாபால்

அமலாபாலுக்கு தலைவாவில் விஜய் ஜோடியாகும் வாய்ப்பு கிட்டியது. ஜெயம் ரவியுடன் ‘நிமிர்ந்து நில்’ தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி’ படங்களில் நடிக்கிறார்.

திரிஷா

திரிஷாவுக்கு ‘சமர்’ படமும் டாப்சிக்கு ஆரம்பம் படமும் இவ்வருடம் வந்தன. ஜீவாவுடன் திரிஷா நடிக்கும் என்றென்றும் புன்னகை படம் இந்த மாதத்திலேயே வருகிறது. ஜெயம் ரவியுடன் பூலோகம் படத்திலும் நடித்து வருகிறார்.

தமன்னா, பிரியாமணி, சமந்தா போன்றோருக்கு தமிழில் இந்த வருடம் படங்கள் இல்லை.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top