Showing posts with label குழம்பு. Show all posts
Showing posts with label குழம்பு. Show all posts

மீல் மேக்கர் கத்திரிக்காய் குழம்பு

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். அதே போல, கத்திரியுடன் மீல் மேக்கர் சேர்த்தால் அதன் ருசியே தனி தான்.

சரி... வாங்க மீல் மேக்கர் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்...

தேவையானப் பொருள்கள்:
மீல் மேக்கர் - 20
வெள்ளை கத்திரிக்காய் - 3
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 1
சிறியது மிளகாய் - 2

தேங்காய் - 1 கப் (துருவியது)
புளி, பூண்டு - தேவையான அளவு
சிறிய நெல்லிக்காய், அளவு மாங்காய் - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
மல்லி இலை - 1 கொத்து.


தாளிக்க:-

கடுகு, உ.பருப்பு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணைய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
  • மீல் மேக்கரை சுடு நீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

  • கத்தரிக்காய், மாங்காய், தக்காளி, வெங்காயம் இவற்றை நறுக்கி கொள்ளவும். புளியை ஊற வைக்கவும்.

  • சிறிது வெங்காயம், தக்காளி, மிளகாய், தேங்காய் இவற்றை தனியே மிக்சியில் அரைத்து கொள்ளவும். மீதி தேங்காயை, சிறிது சீரகம் சேர்த்து அரைக்கவும்.

  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உ.பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.

  • பின்னர் மஞ்சள் தூள் சேர்க்கவும். அதன் பிறகு, கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

  • புளி கரைத்து ஊற்றவும். இதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.

  • சிறிது நீர் சேர்த்து மீல் மேக்கரை போடவும்.

  • அவை வெந்ததும் அரைத்த தேங்காயை போடவும். நன்கு கொதித்ததும் மல்லி இலை போடவும்.
மீல் மேக்கர் கத்திரிக்காய் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள். பின்னர் அதன் சுவை பற்றி என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சமையல் குறிப்பு : கூழ் வற்றல் குழம்பு

நம் வீட்டில் அரிசியில் வடகம் செய்து வைத்திருப்பர். அதனை கொண்டு கூழ் வற்றல் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். சும்மா காரசாரமா செய்து சாப்பிடுப் பாருங்கள். அதன் ருசியே தனி தான்.


தேவையான பொருட்கள் :

கூழ் வற்றல் வடகம் - 20
பூண்டு - 20 பல்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
சாம்பார்பொடி - இரண்டரை (2 1/2) ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 7 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை:
  • கூழ்வற்றலை கொதிக்கும் நீரில் போட்டு ஊறவைக்கவும் (அரை மணியிலிருந்து முக்கால் மணிநேரம்).

  • வெங்காயம், பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்.

  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மேலே கூறியுள்ள தாளிக்கும் பொருள்களை போட்டு, பொரிந்ததும் வெங்காயம்+பூண்டு சேர்த்து சற்று வதக்கவும்.

  • பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  • புளியையும் உப்பையும் 6 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டி சாம்பார்பொடி சேர்த்து கலக்கி, வதங்கிய வெங்காயம் பூண்டு, தக்காளியுடன் ஊற்றவும்.

  • அது நன்கு கொதித்து காயில் உப்பு சார்ந்ததும், ஊறவைத்த வற்றலை அதில் இருக்கும் நீரை வடித்துவிட்டு குழம்பில் சேர்க்கவும்.

  • கால் மணிநேரம் கழித்து கெட்டியானதும் இறக்கவும்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

Thanks : நஸ்ருல்லாஹ்



Related Posts with Thumbnails
 
back to top