Showing posts with label ஜோக்ஸ். Show all posts
Showing posts with label ஜோக்ஸ். Show all posts

ரசித்த சில நகைசுவைகள்..!

சமீபத்தில் நான் ரசித்த சில நகைசுவைகள்....


"தலைவர் எதுக்காக எடை பார்க்கும் மிஷினை பக்கத்துலயே வச்சிருக்காரு?"

"அவரைத் தேடி வர்றவங்க கிட்டே அவரோட ‘வெயிட்’டை காண்பிக்கவாம்!"
"பல் செட்டை எடுத்து எதுக்காக அடிக்கடி என்கிட்டே காட்டறீங்க?"

"அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம் நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க!"
டாக்டர் : ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா, பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் !

மற்றவர்: ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு டாக்டர்.

டாக்டர் :.????
"என்ன கபாலி... மாப்பிள்ளை கோலத்தில திருட வந்திருக்கே?"

"தாலி கட்டியதும் தொழிலுக்கு வந்துட்டேன் சார்!"
"என்னய்யா இது... அமலாபாலுக்காக வட இந்தியாவுல யாரோ உண்ணாவிரம் இருக்காங்களாமே..?"
"தலைவரே, அவங்க உண்ணாவிரதம் இருக்கிறது அமலா பாலுக்காக இல்லை... லோக் பாலுக்காக!"
"காலம் ரொம்ப கெட்டுப்போச்சுனு எப்படிச் சொல்ற?"

"பின்ன, பால்கடை வாசல்ல 'இங்கு சுத்தீகரிக்கப்பட்ட சுகாதாரமான தண்ணீர் கலந்த பால் கிடைக்கும்'னு எழுதியிருக்காங்களே!"
"அந்த கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிங்க இருக்குன்னு எப்படிச் சொல்றே..? "

"ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி போராடுதே..."
பயங்கர ஸ்பீடா சைக்கிள்ல வந்த ஒருத்தர் தன் நண்பன்கிட்ட சொன்னார்... "நேத்து என் மனைவிக்கும் எனக்கும் பயங்கர சண்டை. கோவத்துல இப்பதான் மிதிமிதின்னு மிதிச்சிட்டு வர்றேன்."

"உன்னோட மனைவியையா?" என்று ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார் நண்பர்.

"இல்ல சைக்கிள.." என்றார் சொன்னவர்!
"அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு நீக்கிட்டாரு..?"

"கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..!"
"எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்குச் சேர்ந்தவர், என்ன செய்யறதுன்னே தெரியாம திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருந்தார்..."

"அப்புறம்..?"

"நான்தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்..!"
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top