Showing posts with label கமலஹாசன். Show all posts
Showing posts with label கமலஹாசன். Show all posts

கமலும் கேன்சரும்! இத படிங்க முதலில்...

கேன்சருக்கு எதிராக, கேன்சர் நோயாளர்களின் நலன்களை பேணுவதற்காக இன்று உலகம் முழுவதும் பல அமைப்புக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறான சேவைகளில் கமல் நற்பணி மன்றம் மும்மரமாக ஈடுபட்டிருந்ததும் யாவரும் அறிந்த ஒன்றே.

கேன்சர் பற்றிய செய்திகளை கமல் தனது படங்களின் வாயிலாக வழங்கியுள்ளார். அதில் ஒரு சில உங்கள் பார்வைக்கு....



1. நம்மவர் – இன்றும், கமலின் ரசிகர்கள், அவரை அழைக்கும் பெயர்களில் ஒன்றாகவே மாறிப்போன படம் இது. ரவுடிகள் படிக்கும் ஒரு கல்லூரிக்கு வாத்தியாராக வரும் ஒரு ஆள், அந்த மாணவர்களை மாற்றியமைப்பதே கதை.


2. தசாவதாரம் - பஞ்சாபி பாடகர் அவதார் சிங் தமிழகத்துக்கு வருவதாக ஐந்தாம் அவதாரமெடுக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜெயப்பிரதா. பாடகர் கமலை வைத்து தமிழ் சினிமாவின் தலையெழுத்துக்களில் ஒன்றான கேன்சர் வியாதியும் இந்த படத்திலொரு அவதாரமாய் இருக்கிறது. ஒரு Magic Bullet-னால் பாடகர் அவ்தார் சிங்கின் கேன்சர் குணமாகிறது.

தன் மனைவிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு குரலை இழந்தாவது உயிரோடு இருக்க எண்ணும் பஞ்சாபி பாப் பாடகர் அவ்தார் சிங்கின் தொண்டைக்குள் இருக்கும் கேன்சர் பகுதியை வெளியே எடுத்துச் சென்று, அவரை குணப்படுத்தி விடுகிறது ஃபிளேட்சரின் துப்பாக்கி குண்டு.


3. கேன்சர் என்ற நோய் எத்தனை கொடியது என்று முதன்முதலில் புரிய முடிந்தது வாழ்வே மாயம் படத்தில் வரும் ஒரு 'வாழ்வே மாயம்..' பாடல் மூலம் தான்.


4. சமீபத்திய உதாரணம் வசூல்ராஜா MBBS, இதில் கேன்சர் வந்த இளைஞனை காப்பாற்றமுடியாமல் கமல் கண்கலங்கி நடிப்பது நடிப்பாக தெரிய வாய்ப்பிருக்கவில்லை.


5. மலையாளத்தில் கமலின் சிறப்பு தோற்றத்துடன் வெளிவந்த படம் 4 பிரன்ஸ், இதில் ஜெயராம், ஜெய்சூர்யா, குஞ்சாக்கோ போபன், மற்றும் மீரா ஜஸ்மின் என்போர் நடித்திருந்தனர். இந்த நான்குபேரும் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். மரணத்தை நோக்கி போகும் இவர்களின் விரத்திப்போக்கில் திருப்புமுனையாக அவர்களை இரட்சிக்கும் பாத்திரத்தில் வருகின்றார் கமல்ஹாசன்.


கேன்சர்

மனிதனின் மகிழ்ச்சியான வாழ்வின் ஒரு பெரும் குறுக்கீடாக இந்த கேன்சர் எனும்நோய் நாளாந்தம் ஒவ்வொருவரினம் வாழ்வில் தலைகாட்டிக்கொண்டிருக்கின்றது.

மார்பு புற்றுநோய், கற்பப்பை புற்றுநோய், எலும்பு புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், தோல் புற்றுநோய், இரத்தப்புற்றுநோய், மூளை புற்றுநோய் என பல்வேறுபட்ட புற்றுநோய்கள் ஒருவருக்கு மட்டுமின்றி அவரை சுற்றமுள்ள சுற்றத்தையும் ஆழாத துயரத்தில் ஆழ்திவிடுகின்றது.

கேன்சருக்கு எதிராக, கேன்சர் நோயாளர்களின் நலன்களை பேணுவதற்காக இன்று உலகம் முழுவதும் பல அமைப்புக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறான சேவைகளில் கமல் நற்பணி மன்றம் மும்மரமாக ஈடுபட்டிருந்ததும் யாவரும் அறிந்த ஒன்றே.


வாழ்வே மாயம் திரைப்படத்தில் ஒரு புற்றுநோய் உள்ளவராக கமல் நடித்திருந்தாலும், இந்த கேன்சர் என்ற நோய் கமலை சுற்றியுள்ள, கமலுக்கு நெருக்கமான பலரை காவு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றே.

சாவித்திரியில் இருந்து கௌத்தமி வரை அந்த நோய்க்குள்ளான பலருக்கு அவர்களின் வேதனைகளில் பங்கெடுத்து கமல் ஆறுதலளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றே. குறிப்பாக மகேந்திரனுடைய மரணம், ஸ்ரீ வித்யாவுடைய மரணங்கள் என்பன கேன்சரால் இடம்பெற்றன.

அந்த மரணங்கள் கமலை வெகுவாக பாதித்தும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் நடித்த வாழ்வே மாயம் படத்துல வரும் ஒரு பாடல் என்னை ரொம்பவே ஈர்க்கிறது. வாங்க நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசியுங்கள்....


படம் : வாழ்வே மாயம்
இசை : கங்கை அமரன்
பாடியவர் : KJ.ஏசுதாஸ்
இயற்றியவர் : வாலி
வெளியான ஆண்டு : 1982

மரணம் காத்திருக்கிறது மறைந்து நின்றபடி.... பாடல் பிறக்கின்றது.

பாடல் வரிகள்...

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா...
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது?

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

யாரார்க்கு என்ன வேஷமோ இங்கே யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
மெய் என்று மேனியை யார் சொன்னது

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான்
கருவோடு வந்தது தெருவோடு போவது
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா

கமலும் கன்சரும்! புற்றுநோய்க்கு எதிரான விளிப்புணர்வு நடவடிக்கைகளில் கமல் ஆர்வம் காட்டி ஈடுபடுவது பாராட்டப்பட வேண்டியவர்!!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



மன்மதன் அம்பு - சினிமா விமர்சனம்

அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகி வெளிவந்த புதிய படம் தான் (மன்)னார்-(மதன)கோபால்- (அம்பு)ஜாஸ்ரீ = மன்மதன்அம்பு.
படத்தோட கதை என்னானா ...

நடிகையான த்ரிஷாவை அவரது ரசிகரான மாதவன் காதலிக்கிறார். த்ரிஷா நடிக்கும் படமொன்றின் ஷூட்டிங்கை பார்க்கப்போன இடத்தில் படத்தில் த்ரிஷாவுடன் ஜோடியாக நடிக்கிறார் சூர்யா. இருவரும் ஒய்யாலே... பாட்டுக்கு ஆட்டம் போடுகிறார்கள்.

சூர்யாவுடன் த்ரிஷாவை சந்தேகம் கொள்ள ஆரம்பித்து... இருவருக்குமான வாய்த்தகராரில் கார் 'ஆக்ஸிடென்ட்' ஆகிறது. பிறகு, போலீஸுக்கு கப்பம் கட்டிவிட்டு தப்பிக்கிறார் மாதவன். மாதவன்-த்ரிஷாவுக்கிடையில் இடைவெளி விழுகிறது.

மூன்றாண்டுகளுக்கு பின் ஜெர்மனிக்கு தன் தோழி சங்கீதாவுடன் பிரமாண்ட கப்பலில் சுற்றுளா செல்கிறார் த்ரிஷா. அப்போதுதான் அசத்தலாக 'என்ட்ரி' கொடுக்கிறார் உலக நாயகன். மேஜரான கமல் தன் நண்பனின் (ரமேஷ் அரவிந்த்) ஆபரேஷனுக்காக, த்ரிஷாவை வேவு பார்க்கும் 'டிடக்டிவ்'வாக மாதவனால் நியமிக்கப்படுகிறார்.

ஒருகட்டத்தில் த்ரிஷாவிற்கு நல்ல பொண்ணு என்று மாதவனிடம் 'சர்ட்டிபிகேட்' கொடுக்கிறார் கமல். இந்நிலையில்… நீங்கதான் எதுவுமே கண்டுபிடிக்கலையே… அப்புறம் எப்படி உங்களுக்கு பணம் கொடுக்க முடியும் என மாதவன் மறுக்க… தன் நண்பனுக்காக மாதவனிடன் பணம் கறப்பதற்காக களத்திலிறருங்குகிறார் கமல். அப்போது வரும் தகிடுத்தத்தோம்.. பாடலில் தூள் கிளப்புகிறார் கமல். தியேட்டரில் விசில் சத்தம்

இந்தக் காதல் கடைசியில் என்ன ஆனது... கமலும் த்ரிஷாவும் என்ன ஆகிறார்கள் என்பது மீதிக் கதை.

எனக்கு பிடித்த சில நடிகர்கள்:

கமல் - அசத்தலான அறிமுகக் காட்சியில் ஆரம்பித்து, அவர் வரும் அத்தனைக் காட்சிகளிலும் பார்வையாளர்களை வசப்படுத்திவிடுகிறார். குறிப்பாக அந்த 'பிளாஷ்பேக்' காட்சியில் பிரமிக்க வைக்கிறார் கமல். தன் வயதிற்கேற்ற கேரக்டரை தேர்ந்தெடுப்பதற்கு கமலுக்கு பாராட்டுகள். எக்ஸ்-ஆர்மி மேனாக கனகச்சிதமாகப் பொருந்துகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் - 'நீலவானம்...' பாடல் பாடல் முழுக்க வாயசைப்பு 'ஃபார்வர்டில்' இருக்க, காட்சிகள் 'ரிவர்ஸில்' வருவது மிகவும் அழகு. superb sir!

த்ரிஷாவுக்கு வெகு அழகாகப் பொருந்துகிறது இந்த வேடம். 'விண்ணைத் தாண்டி வருவாயா'வில் பார்த்ததை விட இன்னும் அழகான த்ரிஷா.
த்ரிஷாவிடன் சங்கீதா பேசிக்கொண்டிருக்கும்போது தன் பையன் தூங்குவதாக பாவ்லா காட்டுவதை அறிந்த சங்கீதா, "பசங்க தூங்கறாங்கலா, இல்லையாங்கிறது அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும், பசங்க தூங்கும்போது கால் கட்டவிரலை ஆட்டிக்கிட்டேதான் தூங்குவாங்க" என்று சொன்னவுடன், அந்த சுட்டிப்பயன் கால்விரலை ஆட்டுவது super!
ரமேஷ் அரவிந்த் - அடையாளமே தெரியாம வர்றார். ஆனா நல்லா நடிச்சிருக்கார். ஊர்வசி அவரோட மனைவியா வர்றாங்க.

மாதவன் சற்று வில்லத்தனம் கலந்த ரோல். சில காட்சிகளைத்தவிர படம் முழுக்க 'சரக்கு' பாட்டிலோடவே சுற்றுகிறார். இருந்தாலும் அந்த கேரக்டரை வெளுத்து வாங்குகிறார் மனுஷன். மாதவனோட முறைப்பொண்ணா - 'களவானி' ஓவியா

சங்கீதா - இரண்டு குழந்தைகளுக்கு தாய், ஆனால் விவாகரத்தான இளம் மனைவி... இந்த ரோலை இவரை விட தத்ரூபமாக வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை நல்லாருக்கு. பாட்டெல்லாம் படத்தோட திரைக்கதையோட ஒட்டியே வர்றதால எதுவும் தனியா பிரிச்சு பாக்க முடியாதபடி நல்லாருக்கு பாக்கறதுக்கு.

மனுஷ் நந்தனின் கேமரா, சொகுசுக் கப்பலான 'MSC Cruise' ஐ திரையில் அழகாகக் காட்டுகிறது.

மன்மதன் அம்பு - ரொமான்டிக் காமெடிபடம்
.


மன்மதன் அம்பு - பாடல் அறிமுகம்

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கமலஹாசன் + திரிசா நடிப்பில் K.S.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் புதிய படம் மன்மதன் அம்பு. பாடல்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமா + இளமையோடு இருக்கு. முதல் முறை கேட்டும் போதே அனைத்து பாடல்களும் பிடித்துவிடுவது கூடுதல் சிறப்பு.

கமலின் சேஷ்டைகளை காண ஆவலுடன் கார்திருக்கிறேன். கூட திரிஷா குட்டி வேற இருக்கும் போது கமலுக்கு சொல்லவா வேண்டும்!....

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

1. ஒய்யால...

இரு இளம் காதலர்கள் தங்களின் காதலை கொஞ்சம் காமம் கலந்து பாடும் ஒரு பாடல். காதல் வரிகளை விவேகா எழுத மகேஷ், சுசித்ரா & கார்த்திக்குமார் பாடியிருக்கும் அந்த பாடல். இதில் எனக்கு பிடித்த வரிகள்
சூடப் பூவத்தருவே
சூட ஆச தருவ
பாரு மொகப் பருவ
இத்தனைக்கும் காரணம் - நீதானே!

2. கண்ணோடு கண்ணை ...

கமலின் தன்னிகரில்லாத கவிதை வரிகள். கமலும் திரிசாவும் பாடியிருக்கும் அந்த கவிதை வரிகளில் இலக்கியம் + காதல் + குறும்பு + கிண்டல் + பகுத்தறிவு + சமய சாடல் என்று ஒரு கதம்மாய் குலைத்து தந்துள்ளார்.

ஆளவந்தாளின் எழுதிய 'கடவும் பாதி மிருகம் பாதி' போல இதுவும் தனித்துவம் மிக்கதாக இருக்கு. மெல்லிய இசை கோர்வை + இருவரும் பேசியபடியே கவிதையை வாசிப்பது என்று கேட்க கேட்க ரசிக்கும்படி இருக்கு. இதில் எனக்கு பிடித்த வரிகள்
பொடி நாடிய போட்டே இடை மெலியவேனக்
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திருவது கண்டேன்
முற்றும் துறந்த மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்.

3. நீல வானம் நீயும் நானும் ...

அழகான மெலடி. கமல் எழுதி பாட பின்னணியில் பிரியா ஹிமேஷ் ராகமாய் காற்றில் ஒலிகிறது.

தெளிவான வார்த்தை உச்சரிப்பு + மிருதங்கள் + ஜல் ஜல் என்று அந்த சப்தம் பாடலுக்கு மேலும் அழகு செய்கிறது. இந்த பாடம் மாதவனும் அமைந்தது போல இருக்கு. புதுமணத் தம்பதிகள் மனம் விட்டு பாடும் பாடல் போல இருக்கு. இதில் எனக்கு பிடித்த வரிகள்
நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு சான்றாவது
இன்னொரு உயிர்தானடி


4. போனா போவுதூன்னு விட்டீன்னா ...

முதலாளித்துவம் வேலைகேற்ற ஊதியம் பற்றி நண்பர்களும் கிடல் செய்து பேசி பாடும் ஒரு பாடல். அன்பே சிவம் படத்தில் பற்றி ஒரு பாடல் இருக்கும். அது போலவே இங்கேயும் ஒரு பாடல். எழுதியது பாடியது நம்ப கமல் தான். இதில் எனக்கு பிடித்த வரிகள்
காம தான பேத தண்டம்
நாலும் தோத்து போகும் போது
தகுடு தத்தோம் - செய்
தகுடு தத்தோம்

5. Who's The Hero ...

இரண்டு நாயகிகள் பாடும் பாடல் போல இருக்கு. ஒருவர் ஆங்கிலத்தில் மற்றொருவர் தமிழில் பாடும் படி இருக்கு. ஆண்ட்ரியாவின் குரலில் இன்னும் பெருகேருகிறது. பாடலை எழுதியவர் கமலஹாசன்.


6. மன்மதன் அம்பு...

அறிமுக பாடல் போல இருக்கு. அதற்கலம் பண்ணும் பாடல். பஞ்சாபி பாடல்களை வருவது போல டோலக்கு + ட்ரம்ஸ் பட்டை கிளப்பும் பாடல்

கமலஹாசன் எழுதிய வரிகளை DSP பாடியிருக்கிறார். இந்த பாடலை கேட்கும் போது சிங்கம் படத்துல வந்து "சிங்கம் சிங்கம் " என்ற பாடல் தான நினைவுக்கு வருது.

கவிதை வரிகளை சிதைக்காமல் நல்ல உச்சரிப்புடன் பாடியிருப்பது இந்த பாடல்கள் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்கும். மொத்தத்தில் மன்மதன் அம்பு பாடல்கள் - காதல் திருவிழா

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.



Related Posts with Thumbnails
 
back to top