இன்று நாம் பார்க்க இருக்கும் ஹாலிவூட் படம் Malena. இது இத்தாலி நாட்டு படம். படத்தை இயக்கியவர் Giuseppe Tornatore. இவர் 'Cinema Paradiso' என்ற படத்தை எடுத்து பெரும் புகழ் பெற்றவர்.
ஒரு பள்ளி மாணவனில் பருக்காதலை மிக அழகாக சொன்ன படம். மேலும், ஒரு பெண்ணால் ஆண்துணையின்றி தனித்து வாழ்வதென்பது எப்போதுமே பெரும் சவாலாகவே இருக்குமா? அதிலும் மிக அழகான ஒரு பெண் விதவையாகவும் இருந்துவிட்டால் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்? என்பதை மிக தெளிவாக திரைமொழியில் சொன்னப் படம் இது.
கணவனுக்காகவே காத்திருக்கும் அவள் ஊரில் உள்ள ஆண்கள் அனைவராலும் வயது வேறுபாடின்றி ரசிக்கப்படும் + பெண் பொறாமைப்படும் பேரழகி. அவள் யாரையும் கவனிப்பதில்லை.
இந்த நேரத்தில், 12 வயது ரெனாட்டோவுக்கு (Renato) தந்தையிடமிருந்து ஒரு புதிய சைக்கிள் கிடைக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடன், வேகமாக ஓட்டிச் செல்கிறான். ஒரு கட்டைச் சுவரில் பள்ளிச்சீருடையில் அவனைவிட வயது கூடிய மாணவர்கள் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் ரெனாட்டோ தனது சைக்கிளைக் காட்டி, தானும் இப்போது பெரியவனாகிவிட்டேன். உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் எனக்கூற, அவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
சற்றுத் தொலைவிலுள்ள வீட்டைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒருவன் விசிலடித்து சிக்னல் கொடுக்கிறான். எல்லோரும் அவசரமாக ஓடிவந்து உட்கார்ந்து கொள்ள, கூடவே ரெனாட்டோவும் அவர்களுடன்! அமைதியாக, மிகுந்த எதிர்பார்ப்புடன் அப்படி யாருடைய வருகைக்காகக் காத்திருகிறார்கள்?
மெலீனா!
மெலீனா!
மெலீனா!
அவன் சம வயதுடைய நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு தினமும் Melena-வை ரசிக்க ஆரமிகிறான். அவள் தெருவை கடந்து சென்றதும் சிறுவர்கள் மீண்டும் தமது சைக்கிள்களில் விரைவாக ஓடிச்சென்று இன்னொரு வீதியில் அவளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
அவளின் நடை மற்றும் பொறுமை Renato-வை ரொம்பவும் ரசிக்க வைக்கிறது. அதுவே மெல்ல மெல்ல அவன் மனதில் ஒரு வித காதல் உணர்வை தர தொடக்குகிறது. அவளை தன் காதலி என்று .....
பிரான்ஸ் இத்தாலி மீதான போர் நடவடிக்கையை நிறுத்திக்கொள்வதாக ரேடியோ மூலம் தகவல் வருகிறது. போரில் மெலீனாவின் கணவன் இறந்துவிட்டதாக செய்தி, அவள் மீதான ஒரு பொய்யான ஜோடிப்பு வழக்கு, அவளது செலவுகளுக்குப் பணம் தந்துகொண்டிருந்த அவளது தந்தையின் இறப்பு எனத்தொடரும் நிகழ்வுகளால் அவளது வாழ்க்கை என்னவாகிறது? என்பதை ரெனாட்டோவின் பார்வையில் சொல்கிறது படம்.
ஒரு 13 வயதுப் பையனின் பார்வையிலேயே படத்தை நகர்த்தியது, பலரும் பேசத் தயங்கும் பால்ய கால பாலியல் பிரச்சினையை தைரியமாக முன் வைத்தது என சொல்லி சிக்ஸர் அடிக்கிறார் இயக்குனர்.
ஒரு சீரியசான கதையை நகைச்சுவையாகக் கொண்டு செல்ல Renato-வின் பாலுணர்வு காட்சிகள் உதவுகின்றன. 13 வயதுப் பையனின் கற்பனைகளும் செயல்பாடுகளும் எவ்வித ஒளிவுமறைவுமின்றி காட்சிப்படுத்தப் படுகின்றன. காம உணர்ச்சியின் உச்சத்திற்கே பார்வையாளனைக் கொண்டு செல்ல Renato பாத்திரம் உதவுகின்றது.
படத்தின் வசனங்கள் பல நம் மனதைத் தொடுபவை. தனித்து வாழும் அவளைப் பற்றி வாய் கூசாது பேசும் ஆண்களும், அவளை அவமானப்படுத்தும் பெண்களும்... மறக்க முடியவில்லை.
அதுவே இறுதிக்காட்சியில் காமம் கழன்று பேரன்பு மட்டுமே மிஞ்சும் Renato-வின் நிலைக்கு நம்மையும் கொண்டு செல்கிறது.
மெலீனாவாக Monica Bellucci
Monica Bellucci இத்தாலிய செக்ஸ் பாம். இயக்குநர் Giuseppe Tornatore இந்தக் கதைக் கருவுடன் பேரழகி மெலீனா பாத்திரத்திற்கு பொருத்தமான நடிகை கிடைக்காமல் பலநாட்கள் திரிந்தவர். எப்போது மோனிகாவை சந்தித்தாரோ, அந்த நிமிடமே அவர் முடிவு செய்தார் இவரே மெலீனா என. அதன்பிறகே திரைக்கதை டெவலப் செய்யப்பட்டது.
அழகு என்பது சாதாரணமானது. கம்பீரமான அழகு என்பது அவ்வளவு எளிதில் வாய்க்கப்படுவதில்லை. ஆரம்பக்காட்சிகளில் மோனிகாவைப் பார்க்கும் எவரும் கம்பீர அழகை உணர்ந்து கொள்வர். இந்தப் படத்தைப் பார்த்தபின் பலநாட்களுக்கு மோனிகா நம் மனதை விட்டு நீங்கவில்லை. நீங்களும் அதயே சொல்வீர்கள்!
Renato-வாக GIUSEPPE SULFARO
முதல் படமான மெலீனாவில் நடித்த போது 14 வயது. இயல்பான நடிப்பு. நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்றும் சொல்லலாம்.
படம் முழுவது சிறுவன் ரெனாட்டோ தன்னை ஒரு வளர்ந்த மனிதனாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் பிரயத்தனங்கள் சுவாரஸ்யமானவை.
மெலீனா ஊராரிடம் அடி வாங்கும் சீன்..அப்பப்பா, அந்தப் பையனை விட நாம் அதிகம் பதறுவோம். அதே சீனை ‘பள்ளிக்கூடத்தில்’ தங்கர்பச்சான் கேவலமாக எடுத்திருப்பார். ஒளிப்பதிவும் இசையும் படத்தோடு பணிப்பது கூடுதல் சிறப்பு.
கோழி இடும் முட்டைகள் : 4 / 5
மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அற்புதமான கலைப்படைப்பு. வெளியான நேரத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்து. காரணம், பதின்ம வயதுப் பையனின் பாலியல் காட்சிகள் தான். அந்த எதிர்ப்பு ஓரளவு நியாயம் ஆனதே. எனவே மனமுதிர்ச்சி இல்லாதோர் இப்படத்தைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.
மெலீனா - நெஞ்சைத் தொட்ட படம்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks to Umajee & Sengovi who's blog inspired me to see this movie.
ஒரு பள்ளி மாணவனில் பருக்காதலை மிக அழகாக சொன்ன படம். மேலும், ஒரு பெண்ணால் ஆண்துணையின்றி தனித்து வாழ்வதென்பது எப்போதுமே பெரும் சவாலாகவே இருக்குமா? அதிலும் மிக அழகான ஒரு பெண் விதவையாகவும் இருந்துவிட்டால் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்? என்பதை மிக தெளிவாக திரைமொழியில் சொன்னப் படம் இது.
படத்தோட கதை என்னனா ...
1941 ஆம் ஆண்டு இத்தாலி, இரண்டாம் உலகப்போரின் மத்தியில், சிசிலி (Sicily - இந்த இடம் படத்தின் இயக்குனர் பிறந்த இடம்) என்ற இடத்திலிருந்து படம் தொடக்குகின்றது. போரில் கலந்து கொள்ள கணவனை (Nino Scordia) அனுப்பிவிட்டு, சிசிலி நகரில் தனியே வாழும் பேரழகி மெலீனா, கதையின் நாயகி.கணவனுக்காகவே காத்திருக்கும் அவள் ஊரில் உள்ள ஆண்கள் அனைவராலும் வயது வேறுபாடின்றி ரசிக்கப்படும் + பெண் பொறாமைப்படும் பேரழகி. அவள் யாரையும் கவனிப்பதில்லை.
இந்த நேரத்தில், 12 வயது ரெனாட்டோவுக்கு (Renato) தந்தையிடமிருந்து ஒரு புதிய சைக்கிள் கிடைக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடன், வேகமாக ஓட்டிச் செல்கிறான். ஒரு கட்டைச் சுவரில் பள்ளிச்சீருடையில் அவனைவிட வயது கூடிய மாணவர்கள் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் ரெனாட்டோ தனது சைக்கிளைக் காட்டி, தானும் இப்போது பெரியவனாகிவிட்டேன். உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் எனக்கூற, அவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
சற்றுத் தொலைவிலுள்ள வீட்டைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒருவன் விசிலடித்து சிக்னல் கொடுக்கிறான். எல்லோரும் அவசரமாக ஓடிவந்து உட்கார்ந்து கொள்ள, கூடவே ரெனாட்டோவும் அவர்களுடன்! அமைதியாக, மிகுந்த எதிர்பார்ப்புடன் அப்படி யாருடைய வருகைக்காகக் காத்திருகிறார்கள்?
மெலீனா!
மெலீனா!
மெலீனா!
அவன் சம வயதுடைய நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு தினமும் Melena-வை ரசிக்க ஆரமிகிறான். அவள் தெருவை கடந்து சென்றதும் சிறுவர்கள் மீண்டும் தமது சைக்கிள்களில் விரைவாக ஓடிச்சென்று இன்னொரு வீதியில் அவளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
அவளின் நடை மற்றும் பொறுமை Renato-வை ரொம்பவும் ரசிக்க வைக்கிறது. அதுவே மெல்ல மெல்ல அவன் மனதில் ஒரு வித காதல் உணர்வை தர தொடக்குகிறது. அவளை தன் காதலி என்று .....
பிரான்ஸ் இத்தாலி மீதான போர் நடவடிக்கையை நிறுத்திக்கொள்வதாக ரேடியோ மூலம் தகவல் வருகிறது. போரில் மெலீனாவின் கணவன் இறந்துவிட்டதாக செய்தி, அவள் மீதான ஒரு பொய்யான ஜோடிப்பு வழக்கு, அவளது செலவுகளுக்குப் பணம் தந்துகொண்டிருந்த அவளது தந்தையின் இறப்பு எனத்தொடரும் நிகழ்வுகளால் அவளது வாழ்க்கை என்னவாகிறது? என்பதை ரெனாட்டோவின் பார்வையில் சொல்கிறது படம்.
படத்துல எனக்கு பிடித்த சில ....
இயக்குநர் Giuseppe Tornatoreஒரு 13 வயதுப் பையனின் பார்வையிலேயே படத்தை நகர்த்தியது, பலரும் பேசத் தயங்கும் பால்ய கால பாலியல் பிரச்சினையை தைரியமாக முன் வைத்தது என சொல்லி சிக்ஸர் அடிக்கிறார் இயக்குனர்.
ஒரு சீரியசான கதையை நகைச்சுவையாகக் கொண்டு செல்ல Renato-வின் பாலுணர்வு காட்சிகள் உதவுகின்றன. 13 வயதுப் பையனின் கற்பனைகளும் செயல்பாடுகளும் எவ்வித ஒளிவுமறைவுமின்றி காட்சிப்படுத்தப் படுகின்றன. காம உணர்ச்சியின் உச்சத்திற்கே பார்வையாளனைக் கொண்டு செல்ல Renato பாத்திரம் உதவுகின்றது.
படத்தின் வசனங்கள் பல நம் மனதைத் தொடுபவை. தனித்து வாழும் அவளைப் பற்றி வாய் கூசாது பேசும் ஆண்களும், அவளை அவமானப்படுத்தும் பெண்களும்... மறக்க முடியவில்லை.
அதுவே இறுதிக்காட்சியில் காமம் கழன்று பேரன்பு மட்டுமே மிஞ்சும் Renato-வின் நிலைக்கு நம்மையும் கொண்டு செல்கிறது.
மெலீனாவாக Monica Bellucci
Monica Bellucci இத்தாலிய செக்ஸ் பாம். இயக்குநர் Giuseppe Tornatore இந்தக் கதைக் கருவுடன் பேரழகி மெலீனா பாத்திரத்திற்கு பொருத்தமான நடிகை கிடைக்காமல் பலநாட்கள் திரிந்தவர். எப்போது மோனிகாவை சந்தித்தாரோ, அந்த நிமிடமே அவர் முடிவு செய்தார் இவரே மெலீனா என. அதன்பிறகே திரைக்கதை டெவலப் செய்யப்பட்டது.
அழகு என்பது சாதாரணமானது. கம்பீரமான அழகு என்பது அவ்வளவு எளிதில் வாய்க்கப்படுவதில்லை. ஆரம்பக்காட்சிகளில் மோனிகாவைப் பார்க்கும் எவரும் கம்பீர அழகை உணர்ந்து கொள்வர். இந்தப் படத்தைப் பார்த்தபின் பலநாட்களுக்கு மோனிகா நம் மனதை விட்டு நீங்கவில்லை. நீங்களும் அதயே சொல்வீர்கள்!
Renato-வாக GIUSEPPE SULFARO
முதல் படமான மெலீனாவில் நடித்த போது 14 வயது. இயல்பான நடிப்பு. நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்றும் சொல்லலாம்.
படம் முழுவது சிறுவன் ரெனாட்டோ தன்னை ஒரு வளர்ந்த மனிதனாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் பிரயத்தனங்கள் சுவாரஸ்யமானவை.
மெலீனா ஊராரிடம் அடி வாங்கும் சீன்..அப்பப்பா, அந்தப் பையனை விட நாம் அதிகம் பதறுவோம். அதே சீனை ‘பள்ளிக்கூடத்தில்’ தங்கர்பச்சான் கேவலமாக எடுத்திருப்பார். ஒளிப்பதிவும் இசையும் படத்தோடு பணிப்பது கூடுதல் சிறப்பு.
கோழி இடும் முட்டைகள் : 4 / 5
மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அற்புதமான கலைப்படைப்பு. வெளியான நேரத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்து. காரணம், பதின்ம வயதுப் பையனின் பாலியல் காட்சிகள் தான். அந்த எதிர்ப்பு ஓரளவு நியாயம் ஆனதே. எனவே மனமுதிர்ச்சி இல்லாதோர் இப்படத்தைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.
மெலீனா - நெஞ்சைத் தொட்ட படம்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks to Umajee & Sengovi who's blog inspired me to see this movie.
3 comments:
வெறும் பாலியல் படமாகவே எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, எனது மூவி கலெக்சனில் நீங்கா இடம்பிடித்த காவியம் இந்தப் படம்..நன்றி கோழி!
மொனிகா பெலூசி என்ற ஒரு பெயருக்காக பார்க்க ஆரம்பித்து, பின் கதையால் மீண்டும் சிலமுறை திரும்பிப் பார்த்த அருமையான படம்..
தங்கள் வருகைக்கு நன்றி செங்கோவி & ஹாலிவுட் ரசிகன்!
முதலில் படம் தரும் உணர்வு போக போக மாறுவதை நாம் உணரலாம்.
Post a Comment