பதினாறு 2011 - பாடல் விமர்சனம்

'சுந்தர புருஷன்', 'விஐபி', 'புன்னைகை பூவே' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கும் சபாபதி இயக்கியிருக்கும் இப்படத்தின் 'சென்னை 28' சிவா தான் ஹீரோ. இவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மது ஷாலினி.

இந்த படத்திற்கு மற்றொரு ஹீரோவும் இருக்கிறார். அவர்தான் நம்ம யுவன். படத்தின் இசை வெளியீட்டிற்காகவும், படத்தின் விளம்பரத்திலும் யுவனின் புகைப்படத்தை மட்டும் அச்சிட்டு விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக கோடம்பாக்கத்தில் யுவனின் இசைக்கொடிதான் உயரப் பறந்தாலும், இப்படத்தின் மூலம் இன்னும் கொஞ்சம் அதிகமாவே பறக்கும் அளவிற்கு உள்ள இப்படத்தின் பாடல்கள்.

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

1. அடடா என் மீது - பைலா சிண்டே, ஹரிஹரன்

ஆரம்பத்தில் பைலா சிண்டே குரல் மெதுவாக பயணிக்க தொடக்கி பின்னர் நம் மனதோடு ஒன்றிவிடுகிறது.

கார்த்திக் நேதா வரிகளை ஹரிஹரன் மிக அற்புதமாக பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கு இவரை தவிர வேறு ஒருவரை நினைத்து பார்க்க முடியாது. வசீகிற குரல் + தெளிவான உச்சரிப்பு.


2. காட்டு செடிக்கு - கார்த்திக் ராஜா

கார்த்திக் ராஜா குரலில் மிக மென்மையான சினேகன் பாடல். வழக்கமான குரல் தொனியில் இல்லாமல் சற்றே வேறுவிதமாக இருக்கு கார்த்திக் ராஜா குரல். மிக அருமையான ஆர்கெஸ்ட்ரா. பாடல் முடியும் போது ஒரு வித இதமான இசை கேட்ட திருப்தி மனதில் எழும்.


3. யார் சொல்லி காதல் - யுவன் ஷங்கர் ராஜா

சினேகன் பாடல் வரிகள். யுவனுக்கே உரிய ஒரு ஜீவனுள்ள பாடல். அதகேற்றார் போல இசை கோர்வை. யுவனின் முந்தைய பாடலில் இருக்கும் ஒரு வித ஈர்ப்பு இந்த பாடலிலும் உண்டு.


4. வானம் நமதே - ஷங்கர் மஹாதேவன்

மீண்டும் யுவன் இசையில் சங்கர் மகாதேவனின் கண்ணீர் குரலில் ஒரு பாடல். அனைவரயும் கவர்திழுக்கும் சினேகன் பாடல் வரிகளில் எனக்கு பிடித்த வரிகள்
யாரோ நடை போட்ட திசையில் - நாம் போகாமல்
நாம் போகும் திசை - நாளை வழியாகலாம்

5. Theme Music - யுவன் ஷங்கர் ராஜா

பெரிதாக சொல்லிகொள்ளும் படி இல்லை. ஆனால், படத்துடன் காணும்போது இந்த இசையின் வீரியம் இன்னும் வெளிவரும் என்பது என் கருத்து.

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.



பதினாறு - மொத்ததில் இயைய தலைமுறையை கவரக்கூடிய ரொமாண்டிக் மெலடி பாடல் கேட்க கேட்க பிடிக்கும் படி இருக்கு.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top