The Tournament - ஹாலிவுட் பட விமர்சனம்

கடந்த ஒரு வாரமா நான் பார்த்த ஒரு ஹாலிவுட் படத்தை பற்றி எழுத நினைத்தேன். இன்று தன் அதற்கு நேரம் கிடைத்தது. இந்த படத்தோட பேரு "தி டோர்னமென்ட் (The Tournament - 2009)". உங்களை 90% இந்த படம் திருப்தி படுத்தும்.


படத்தோட கதை என்னனா ...

ஒரு நகரில், யாரும் அவளவு எளிதில் கண்டுபிடிக்கமுடியாத அந்த கிளப்பில் ஏழு வருடத்திற்கு ஒரு முறை, பல நாடுகளில் இருந்து வந்திருக்கும் பணக்கார மனிதர்கள் கூடுவார்கள். அவர்கள் முன்பு மிக பெரிய திரை ஓன்று இருக்கும்.

பெரிய மேஜையின் ஓரத்தில் அந்த பணக்கார மனிதர்கள் அமர்ந்திருக்க, அவர்கள் முன்பு பணக் குவியல்கள். இவர்கள் இங்கே கூடி வந்தது ஒரு விளையாட்டை காண தான். அது தான் "சாவு அல்லது சாகடி".(kill-or-be-killed)

இதற்காக கடந்த ஏழு வருடத்தில் மிக திறமையாக, எதிரிகளை கொன்று வெற்றி பெற்றவர்கள் இந்த பந்தயத்தில் / விளையாட்டில் கலந்துகொள்லாம். இதற்காக 30 பேரை அந்த கிளப் தேர்வு செய்து திரையில் காட்டுவார்கள். அதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சூது நடக்கும். இவர் தான் வெற்றிபெறுவார் என்று ஒவொரு பணக்காரனும் பணத்தை கட்டுவார்கள்.

இந்த விளையாட்டில் வெற்றி பெறுபவனுக்கு 30 மில்லியன் டாலர் பரிசு தொகை + "பெஸ்ட் Assassion" என்ற பட்டமும் கிடைக்கும்.

30 மணி நேரத்தில், 30 மனிதர்களில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு அந்த பரிசு தொகை. இவர்களை கண்காணிக்கும் பொறுப்பு இரண்டு பேரிடம் தரபடுகிறது. அவர்கள், ஒரு சிறு 'சிப்' (CHIP) ஒன்றை தயாரித்து அந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் நபரின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் பொருத்து விட்டு அவர்களின் செயல்களை கணிப்பொறி (Computer)மூலம் கண்காணித்து வருகிறார்கள்.


இந்த விளையாட்டில் எப்படியாது இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஒரு சீனப்பெண் லை லை ஹென் (Kelly Hu). அவள் மீது நிறைய பேர் பணம் கட்டுகிறார்கள்.. இந்த விளையாட்டு தொடக்கும் சற்று நேரத்திற்கு முன்பு நம்ம ஹீரோ ஜோஷு ஹார்லோ(Ving Rhames) வந்து சேருகிறார். இவர் கடந்த முறை இந்த விளையாட்டில் வெற்றி பெற்றவர்.

இவர் இந்த வருடம் கலந்துகொள்ள வந்ததே தன் மனைவியை கொன்றவன் இந்த விளையாட்டில் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டு அவர்களை பழிவாங்கவும் + இந்த வருடம் வெற்றி பெறவும் வந்துள்ளார்.

இதில் கலந்து கொள்ளும் வீரரிடம் ஒரு செல் (Apple Cell Phone) போன்ற கருவி தருவார்கள். அதில் அந்த இடத்தில் இருக்கும் மற்ற வீரர்களை சிக்னல் மூலம் காட்டும். அதைக் கொண்டு வீர்கள் மற்றவர்கள் வீத்துவார்கள்.

விளையாட்டு ஆரம்பம் ஆகிறது.
....
....
இந்த விளையாட்டில் யார் வெற்றி பெற்றார்கள் ? ஹீரோ தன் மனைவியை கொன்றவனை கண்டுபிடித்தானா ? என்று ஒரு நல்ல DVD வாங்கி பாருங்கள்.


படத்துல என்னை கவர்த்தவைகள்...

  • இப்படத்தின் கேமிரா மேனுக்கும் + இசைக்கும் தான் என் முதல் பாராட்டுகள். Excellent Work!!

  • டைரக்டர் ஸ்காட் மான்(Scott Mann)-க்கு இது தான் முதல் படம். சும்மா பட்டைய கிளப்பியிருக்காரு. படம் ஆரம்பமே, கடந்த ஹீரோ முறை எப்படி வெற்றி பெற்றான் என்று தொடக்கும். அதிலிருந்து ஒவொரு நிமிடமும் நம்மை சீட் நுனிக்கே வந்து அவர செய்யும் சாகசம் + விறு விருப்பு. Superb!

  • இந்த விளையாட்டில் ஒரு 'பாதர்' தெரியாமல் வந்து மாற்றிக்கொள்ள, அவர் படும் பாடு நிச்சயம் ரசிக்க வைக்கும்.

  • அந்த சீனப்பெண் என்னமா சண்டை போடுது. சரியான நடிப்பு. ஹீரோவை விடவும் அதிகம் நம்மை கவர்வது இவள்தான்.

  • சண்டை காட்சிகளும் + கார் துரத்தல்கள் + துப்பாக்கி சத்தம் + ஓட்டம் என படத்தில் பயங்கர விறு விருப்பு. கிளைமேக்ஸ் யாரும் எதிர் பார்காதது. மிக அருமை.

இந்த படத்தோட டிரைலர்



The Tournament (2009)- Powerfull package - சண்டை + சஸ்பென்சு பிரியர்களுக்கு ஒரு நல்ல விருந்து.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



10 comments:

Jackiesekar said...

என்னனோட தளத்து ஸ்டைலில் இருக்கின்றது...வாழ்த்துக்கள்

Kolipaiyan said...

ரொம்ப நன்றி ஜாக்கி அண்ணா.

மர்மயோகி said...

நீ என்ன படத்தோட புரடியூசரா? இல்ல அவனோட மகனா? ஏன் படத்தோட முடிவ சொல்ல மாட்டியளோ?

Kolipaiyan said...

படத்தோட முடிவ தெரிதா அந்த படம் பார்க்கும் ரசனை குறையும் என்பது என தாழ்மையான கருத்து. ஒரு சில நண்பர்கள் படத்தின் முடிவை எழுதவேண்டாம் என்ற கேட்டுக்கொண்டதால் நான் அதனை எழுதுவதில்லை.

வருகை நன்றி மர்மயோகி

கருந்தேள் கண்ணாயிரம் said...

நல்லாருந்துச்சி நண்பா.. இந்த மாதிரி தீம், லயன் காமிக்ஸ் மாடஸ்டி கதைகள்ல அடிக்கடி வரும்.. நான் இன்னும் பார்த்ததில்ல.. பார்த்துடுறேன்.. ;-)

Kolipaiyan said...

ரொம்ப நன்றி கருந்தேள்.

KUTTI said...

உங்க விமர்சனம் நல்லா இருந்தது தல...

மனோ

Kolipaiyan said...

Thanks Mano.

cheena (சீனா) said...

அன்பின் கோழி பையன்

நல்லதொரு விம்ர்சனம்

நல்வாழ்த்துகள் கோழி பையன்
நட்புடன் சீனா

Kolipaiyan said...

Thanks cheena. Watch this movie. Good entertainer movie.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top