ஹலோ - ஒரு நிமிடம் !

தொலைப்பேசியில் அழைத்து நம்மை சாமானியத்தில் விடாமல், பிடிபிடி என்று பிடித்து விழிப்பிதுங்க வைப்பவர்கள் உண்டு. இருபது நிமிடங்களுக்குக் குறைந்து முடிக்க மாட்டார்கள். வளவள என்று சம்பந்தமில்லாத விசயங்களை விவரிப்பார்கள். மேடைப் பிரசங்கம் போல அரைமணி நேரம் தங்களது சொந்தப் கதையை சொல்லி சோகத்தை பிழிபவர்கள் உண்டு.

அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் சிலர் கூட நம் அவசரம் அவதியும் புரியாமல் எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டு நம் நேரத்தை விழுங்குவது உண்டு. இவர்களையெல்லாம் எப்படி சமாளிப்பது ? 'ஒரு நிமிட' உத்திதான்.


நல விசாரிப்புகளை முடித்துக்கொள்ள தான் அந்த ஒரு நிமிடம். தொலைபேசி என்றால், 'ஏதும் அவசரமா? நான் அழைக்கவா?' என்று கேட்டு, சம்மதம் பெற்றுத் தொலைப்பேசி தொடர்பைக் கையோடு துண்டிக்க வேண்டும்.

'நாம் தொலைப்பேசியில் அழைத்தால் நமக்கல்லவா செலவு ?' என்று கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை. நாம் பணத்தை சம்பாதிக்கலாம். நேரத்தை மட்டும் இழந்தால் இழந்தது தான். நாம் தேடிப்போகும் போதும், நாம் தொலைப்பேசியில் அழைக்கும்போதும் அந்த சந்திப்போ, எவளவு நேரம் இடம் பெற வேண்டும் என்று தீர்மானிக்கிற உரிமை நமக்கு வந்து விடுகிறது.

'சரி சுருக்கமா சொல்லுங்கள். எனக்கு நிறைய வேலைகள் பாக்கி இருகின்றன' என்று உரிமையுடன் சொல்லலாம். ஆனால், அவர்கள் தொலைபேசியில் அழைத்து விடும்போதோ இதை நாம் அத்துணை சுலபமாக சொல்லிவிட முடியாது.

நாம் பேசும் அந்த ஒரு நிமிடம் மிக இயல்பாக இருக்க வேண்டும். எதிராளியின் மனம் புண்படாதபடி குழைவாகக் கேட்ட வேண்டும். நாம் எடுத்துவிட்ட தீர்மானத்தை நாம் அவர்களின் அனுமதியோடு எப்படியும் செயல்படுத்துவது என்கிற உறுதியும் மிக அவசியம்.

இந்த ஒரு நிமிடத்தை சரிவரப் பயன்படுத்தாததால் நம்முடைய எத்துணையோ முக்கிய நிமிடங்களை இந்தக் கூட்டம் விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகிறது.

ஒரு சிரிப்பு நினைவுக்கு வருது.

வீடு தீ பிடித்த போது தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்டு கால் கொடுத்தாராம் ஒரு மகா கஞ்ச பிரபு.
நன்றி : லேனா

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top