அன்றாட உணவில் அதிகம் சேர்க்கப்படு மூலிகை இனங்களில் ஒன்று இந்த வெங்காயம். இதை அறியாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். இதனைக் கொண்டு சின்ன வெங்காயப் பொரியல் செய்வது எப்படி என்று இனி பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
செய்முறை :
நன்றி: வனஜா.
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - கால் கிலோ
மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருக்கு - 2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிதளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
அரைக்க :
தேங்காய் துருவல் - கால் மூடி
சீரம் - அரை டீஸ்பூன்
செய்முறை :
- வெங்காயத்தை உரித்துப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
- தேங்காயுடன் சீரகத்தை சேர்த்து கரகரவென்று அரைக்கவும்
- வாணலியில் தாளித்து போட்டு வெங்காயத்தை சேர்த்து அது கண்ணாடி போல ஆகும் வரை வதக்கவும்.
- வதக்கிய வெங்காயத்தில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, அரைத்த தேங்காயையும் போட்டுப் பிரட்டி இறக்கவும்.
- சின்ன வெங்காயப் பொரியல் தயார்.
வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும். குறிப்பாக உடல் சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமலுக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்ததைக் குறைக்கும் வல்லமையும் வெங்காயத்திற்கு உண்டு.
நன்றி: வனஜா.
10 comments:
அப்போ சீரகத்தை என்ன பன்னுவது
//தேங்காயுடன் சீரகத்தை சேர்த்து கரகரவென்று அரைக்கவும்//
வருகைக்கு நன்றி சபிக்.
கோழிப்பையன்னு பார்த்ததும் வெங்காய பொறியல்ல முட்டையும் சேர்ப்பின்கன்னு நெனச்சேன். (ஓ அது முட்டை பொரியலோ?)
நீங்கள் முட்டை விரும்பி என்றால் அதனுடன் சில முட்டைகளையும் செரித்து வருத்தல் முட்டை பொரியல் ரெடி. பார்த்தீங்களா எவளவு ஈசியா சைடிஷ் பண்ண கத்துகிறீங்க.
வருகைக்கு நன்றி கலாநேசன்.
சூப்பர்ப்...
சமையல்.. சமையல் ..
நல்ல சமையல் ...
Figher - இந்த ஸ்பெல்லிங்கை மாத்துங்க அப்பத்தான் ஓட்டுப் போடுவேன்.
- இங்கிளீஷ் வாள்க இங்கிளீஷ் வாள்க
அப்ப இதை சப்பாத்திக்கு தொட்டுக்க்கலாமா சார்? நீங்க ஒண்ணுமே சொல்லலையே அதான் கேட்டேன்!!
@ Geetha Achal - Thanks for your visit and your comment.
@கே.ஆர்.பி.செந்தில்,
@முகிலன் &
@எம் அப்துல் காதர் - வருகைக்கு நன்றி!
@எம் அப்துல் காதர்
சப்பாத்திக்கு இது அவ்வளவு பொருத்தமான சைடிஷ் இல்லை என்று தான் நான் சொல்வேன்.
Post a Comment