கோசம்பரி என்னும் பருப்பு மசியல் வகை உணவு தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகாவில் மிகவும் பிரசித்தம். இந்த கோசம்பரி ஆந்திரா மாநிலத்தில் சற்றே வித்தியாசமாக செய்வார்கள். கொஞ்சம் காரம் தூக்கலாக இந்த கோசம்பரி செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு சுவையுடன் இருக்கும். இந்த கோசம்பரி செய்வது எப்படி என்று இனி பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
செய்முறை :
ஒரு வேண்டுகோள்...!
தேவையான பொருட்கள் :
வெள்ளைக்கொண்டை கடலை - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
கொத்தமல்லித் தலை - சிறிதளவு
கடுகு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ற அளவு
செய்முறை :
- கொண்டைகடலையை நன்கு கவுவி முதல் நாள் இரவே ஊறவைக்கவேண்டும்.
- தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் தண்ணீர் சேர்க்காமல் தூளாக்கவும்.
- ஊறவைத்த கொண்டைகடலை + பச்சை மிளகாய் + இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
- பிறகு உப்பு + எழுமிட்சைபழசாறு + தேங்காய் துருவல் சேர்க்கவும்.
- கொஞ்சம் எண்ணையில் கடுகு போட்டு தாளித்து அதில் அரைத்த கலவையை கொட்டி நிமிடம் கொதிக்க விடவும்.
- காரம் அதிகமாக தேவைப்பட்டால் காய்ந்த மிளகாய் சேர்க்கலாம்.
- அதன் பின்னர் கொத்தமல்லி தலையை சேர்த்து பரிமாறலாம்.
ஒரு வேண்டுகோள்...!
என்ன உடனே செய்துப்பார்க்க தயாராகிவிட்டீர்களா ...? சபாஸ்!
செய்து பார்த்து ருசித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்தை இங்கே தெரிவித்தால் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
0 comments:
Post a Comment