காதல் தோற்றதாய் கதைகள் ஏது?

நானும் 'நாடோடிகள்' படத்த 43-நாள் அன்று தான் முதன் முறையாக பார்த்தேன். படத்த பத்தி நிறைய நண்பர்கள் சொல்லிவிட்டார்கள். நான் ஒன்றும் புதுசா சொல்ல ஒன்னும் இல்லைங்கோ. ஆனா, அந்த படத்துல, கதாநாயகியை முதன் முறையாக காட்டும் போது (டைரக்டர் சசி வீட்டில்) பின்னணி இசையாக ஒரு பாடல் ஒலிக்கும். சசியின் காதல் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்தபோது ஒரு பாடல் பின்னணி இசையாக ஒலிக்கும்.

இரண்டு சூழ்நிலைகளுக்கும் பொருந்தும் விதமாக இசை அமைப்பாளர் சுந்தர் சி பாபு இசைஅமைத்த அந்த பாடல் வரிகள் மனதை கலங்கடிக்கும். பாடல்வரிகளும் படத்தின் நிகழ்வுகளை சொல்லும் விதமாக எழுதிய பாடல் ஆசிரியரை பாராட்டாமல் இருக்க முடியாது. ஹரிஹரன் பாடிய அந்த பாடல் ...
....
....
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வளியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தத்பர்த்தம் .

நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும்பாடு
ஒருபுறம் தலைவன் மறுபுறம் தகப்பன் இருகொல்லி எருபானால்
பாசத்துக்காக காதலை தொலைத்து ஆலையில் கரும்பானால்
யார் காரணம் ..? யார் பாவம் யாரை சேரும்
யார் தான் சொல்ல
கண்ணீர் வார்த்தால் கண்ணீராலே
சுற்றம் செய்த குற்றம் தானே
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வை பார்பதேது உறவின் சூழ்நிலை

மனமெனும் குளத்தில் விழி என்னும் கல்லை முதல் முதல் எறிந்தாலே
அலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வாசம் விழுந்தானே
நதி வழி போனால் கருவற கூடும் விதி வழி போனானே
விதை ஓன்று போட வேறொன்று முளைத்த கதை என்று ஆனானே
என் சொல்வது என் சொல்வது
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பை போலே நட்பை காத்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வளியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தத்பர்த்தம்...

நட்புக்கு மரியாதை செய்யக் காதலுக்குக் கை கொடுத்ததால், நாடோடிகள் ஆகும் நண்பர்களின் கதை!

மேலும் இப்படத்தை பற்றிய விமர்சனங்களுக்கு கீழுள்ள இடுக்கையை பார்க்கவும்.

1.சினிமா விமர்சனம்-நாடோடிகள்

2.நாடோடிகள் - தந்தைகளின் காவியம்!

3.நாடோடிகள் - கலக்கல்; மிஸ் பண்ணாதீங்க.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top