Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க...

இந்தியாவில் 50 ஆண்டில் 220 மொழிகள் அழிவு - :(

மனிதர்கள் தங்களது கருத்துக்களை மற்றவர்களிடத்தில் பரிமாறி கொள்ள உருவாக்கி கொண்டது தான் மொழிகள். மொழி உருவாக அடிப்படை காரணம் ஒன்று என்றாலும் இனத்தை பொருத்தும் வாழும் இடத்தை பொருத்தும் மொழிகள் பலவேறு வகைகளாக பிரித்து வித்தியாசமான எழுத்து வடிவங்களை கொடுத்து வேறுபடுத்தி பேசி, எழுதி வருகின்றனர்.


இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்து விட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் மொழி ஆய்வு மற்றும் பதிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்த மையம் இந்தியா முழுவதும் உள்ள மொழிகள் குறித்து ஆய்வு நடத்தியது. எழுத்தாளர் கணேஷ் தேவி தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய மக்கள் மொழி குறித்த ஆய்வு என்ற பெயரில் இது நடத்தப்பட்டது. 2011ம் ஆண்டு தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

ஆய்வு முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பாளரும், திட்ட தலைவருமான கணேஷ் தேவி கூறுகையில், இந்தியா முழுவதும் எங்கள் ஆய்வு மூலமாக 780 மொழிகளை கண்டுபிடித்தோம். அவற்றில் 100க்கும் மேற்பட்டவை அழியும் நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு அழிந்து போன மொழிகள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் மொழிகள் குறித்த எங்கள் ஆய்வில் கிட்டத்தட்ட 880 மொழிகள் இந்தியா முழுவதும் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அவற்றில் பல மொழிகள் மறைந்துவிட்டன. 1961ம் ஆண்டு 1,652 மொழிகள் இருந்ததாக பதிவாகி உள்ளது. பின்னர் அது 1,100 ஆக குறைந்துள்ளது.

1971 கணக்கெடுப்பின் போது 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் மொழிகள் 108 இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது. கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துள்ளன என்றார்.

தமிழ் மொழி இறக்குமா...?


தமிழ் மொழி பேசுவோர் தொகையில் முதல் 20 மொழிகளில் ஒன்று. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியத்தையும் விருத்தியையும் கொண்ட மொழி. தமிழ் கணினியிலும் தன்னை நிலைநிறுத்த முனைகிறது. தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இதற்கு அரச அங்கீகாரம் உண்டு. தமிழ்நாட்டில் இது தனி ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பத்திரிகை, இதழ், தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என தமிழில் விருத்தி பெற்ற ஊடகத்துறை உண்டு. எனவே தமிழ் மொழி அடுத்த நூற்றாண்டுக்குள் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. எனினும் தமிழ் மொழி நலிவடையக் கூடும்.


உலகில் பல்வேறு மொழிகள் வழக்கத்தில் இருந்தாலும், ஆயுதம் (ஆயுத எழுத்து) தாங்கி நிற்கும் மொழியாக தமிழ் மட்டுமே உள்ளது. அந்த வகையில், ஆயுதம் தாங்கிய மொழியைச் சேர்ந்தவர்களான நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.

தமிழரோடு தமிழில் பேசுவோம்! வருங்கால சந்ததியினருக்கு உதவி செய்வோம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



பதிவர் வண்ணத்துபூச்சியார் + தமிழ் + மருத்துவக் குறிப்பு

ஜெயா டிவியில் பதிவர் வண்ணத்துபூச்சியார் பேட்டி

நண்ப பதிவர் வண்ணத்துபூச்சியார் @ சூர்யா சுரேஷ், ஜெயா டிவியில் இன்று காலை மலர் நிகழ்ச்சியில் வந்து சும்மா ஒரு கலக்கு கலக்கினார்.

பேட்டியின் பொது கையைக்கட்டிக்கொண்டு ஒரு பள்ளி மாணவனைப் போல மிகவும் பவ்வியமாக பேட்டிக்கொடுத்தார். நான் மிகவும் ரசித்து பார்த்தேன். உலக சினிமாவை பற்றி அவரது கருத்துக்களை மிகவும் தெளிவாக அதே சமயம் நம் நாட்டு திரை துறையினர் பற்றுயும் விட்டு கொடுக்காமல் பேசியது நன்றாக இருந்தது.

அதிக நேரம் ஈரானிய திரைப்படங்கள் பற்றியும் அதில் உள்ள மிக சிறந்த தொழில்நுட்பப கலைனர்கள் பற்றியும் தனது பார்வையில் மிக அழகாக சொன்ன விதம் அருமை. 120 அவார்ட்s பெற்ற 'மெக்கல்' திரை குடும்பத்தை பற்றி சொன்ன போது வியந்து போன்றேன்.

அவரது உலக பார்வை மிகவும் வித்தியாசமான அதே சமயம் தினமும் ஒரு திரைப் படம் பார்ப்பேன் என்று சொன்ன போது மலைத்து நின்றேன். தினமும் ஒரு படமா ? எவ்வாறு இது சத்தியம்? புரியவில்லை. (சூர்யா சார் நீங்களே இதருக்கு விளக்கம் தாரும்!)

உலக சினிமாவை பற்றி ஒரு புத்தகம் எழுதி வருவதாகவும், வரும் புத்தக விழாவில் அதனை வெளியிட இருப்பதாக சொன்னார்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

எங்கும் தமிழ்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிவாக நடவடிக்கை அனைத்தும் தமிழ் மொழியிலேயே மேற்கொள்ளவேண்டும். ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் தமிழிலேயே மையோப்பம் இட வேண்டும் என்று துணைவேந்தர் திரு. தங்கராசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் நடைபுரைகள் அனைத்தும் தமிழிலேயே நடைபெற்றன என்பது குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

வாழ்க தமிழ்!

மருத்துவக் குறிப்பு - அல்சர்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சு பொருள்களும் அறிப்பதனால் குடல் புண் என்கின்ற அல்சர் வருகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவந்தால் இந்த பாதிப்பில் இருந்து மீளலாம்.

நலமுடன் வாழ் வாழ்த்துக்கள்!

சிந்தனை

மகரிஷி ரமணர் அருளிய ஒரு சிந்தனை
"மனிதன், எல்லாவற்றையும் தானே செய்வதாக எண்ணிக்கொள்கிறான். நம்மை மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து கொண்டால் எல்லாப் தொல்லைகளில் இருந்தும் விடுபட்டுவிடுவோம்"

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top