84வது ஆஸ்கார் விருது

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலில் நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தி ஆர்டிஸ்ற் திரைப்படம் சென்ற ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது.

கறுப்பு வெள்ளையில் தயாரிக்கப்பட்டு, வசனம் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் அனைத்து திரைப்படங்களையும் தோற்கடித்து வெற்றி வாகை சூடியிருக்கிறது. ஏற்கெனவே இந்தத் திரைப்படம் பல விருதுகளை வென்றுள்ளது. கோல்டன் குளோப் விருதையும் வென்று சாதனை படைத்திருந்தது.

தி ஆர்டிஸ்ற் படத்திற்கு சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த மேக்கப் விருதுகள் கிடைத்தன. பரிசளிப்பில் பேசிய இயக்குனர் திரையுலகில் இப்படம் ஒரு சரித்திர மாற்றம் என்றார்.


ஆஸ்கார் விருதுகளின் விபரம் வருமாறு :

சிறந்த திரைப்படம் : ’The Artist’
சிறந்த டாக்குமெண்டரி பிலிம் : ‘Undefeated’
சிறந்த டாக்குமெண்டரி குறும்படம் : ‘Saving Face’

Video Trailer for 'The Shore'



சிறந்த குறும்படம் : ‘The Shore’
சிறந்த அனிமேஷன் திரைப்படம் : ‘Rango’
சிறந்த அனிமேஷன் குறும்படம் : ‘The Fantastic Flying Books of Mr. Morris Lessmore’
சிறந்த வெளிநாட்டு படம் : ‘A Separation’


சிறந்த நடிகர் ஆண் : Jean Dujardin (‘The Artist’)
சிறந்த பெண் நடிகை : Meryl Streep (‘Jernladyen’)
சிறந்த துணை நடிகர் : Christopher Plummer (‘Beginners’)
சிறந்த துணை நடிகை : Octavia Spencer (‘The Help’)


சிறந்த இயக்குநர் : Hazanavicius (‘The Artist’)
சிறந்த கலை இயக்குநர் : ‘Hugo’
சிறந்த படத்தொகுப்பு : ‘The Girl With The Dragon Tattoo’

சிறந்த திரைக்கதைக்கான நூல் : ‘The Descendants’
சிறந்த திரைக்கதை மூலப்பிரதி : ‘Midnight In Paris’

சிறந்த ஆடை அலங்காரம் : ‘The Artist’
சிறந்த ஒப்பனை : ‘Jernladyen’

சிறந்த பாடல் : ‘Man Or Muppet’ (‘The Muppets’)
சிறந்த இசை : ‘The Artist’
சிறந்த பின்னணி இசை : ‘Hugo’
சிறந்த சவுண்ட் மிக்சிங் : ‘Hugo’
சிறந்த கமேரா : ‘Hugo’
சிறந்த விஷ்யுவல் எபக்ட் : ‘Hugo’

'The Artist' Movie Trailer :



Source : Dinakaran
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top